Saturday, October 17, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள் - கோகுலம் ஒரு டீசர்


நண்பர்களே,

அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அடுத்த வாரம் தான் இந்த பதிவை இட எண்ணி இருந்தேன். ஆனாலும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி ந்நாளில் வாழ்த்துக்களை தெரிவிக்க எண்ணி இந்த டீசர் பதிவை இடுகிறேன். முழுமையான பதிவு மேலும் பல ஸ்கான்களுடன் விரைவில் வரும்.

நண்பர்கள் அனைவரும் முதன் முதலில் படித்த காமிக்ஸ் பற்றி கேட்டால் சற்று தடுமாறுவார்கள். கண்டிப்பாக முத்து காமிக்ஸ்/ராணி காமிக்ஸ்/லயன் காமிக்ஸ்/இதர.... இந்த லிஸ்ட்டில் இராது. சிலர் பூந்தளிர் முதலும், இன்னும் சிலர் முத்து வாரமலருடனும் கூட ஆரம்பித்து இருக்கலாம். அல்லது அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றுடன் கூட இருக்கலாம். ஆனால் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த (இதனை காமிக்ஸ் என்று வகைப் படுத்த இயலாததால்) சிறுவர் இலக்கிய இதழ் கோகுலம் ஆகும்.

நான் மேலே கூறியவற்றில் பல இதழ்கள் இப்போது வருவதில்லை. பூந்தளிர் நின்று விட்டது, பாலமித்ரா கூட. ஆனால் அம்புலிமாமா மற்றும் கோகுலம் போன்ற இதழ்கள் இப்போது கூட வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்மை போன்ற பல வருட வாசகர்கள் இப்போதும் கூட சில சமயங்களில் அதனை வாங்கி விடுகின்றனர். வேறென்ன செய்ய? பழைய பழக்கங்கள் அத்தனை சுலபத்தில் விட்டு விலகுவதில்லையே? ஆனால் நம்மை ஒரு காலத்தில் மதி மயங்க செய்த அந்த செப்பிடு வித்தைகள் இப்போது இந்த புத்தகங்களில் இல்லை. சிறுவர்களுக்கு இந்த கதைகள் தான் பிடிக்கும், இது போன்ற சித்திரக்கதைகள் தான் பிடிக்கும் என்று இவர்களே நினைத்துக் கொண்டு இவர்களின் மனம் போன போக்கில் கதைகளை தரம் பிரிக்காமல் வெளியிட்டு இந்த புத்தகங்களில் மதிப்பை தாழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் முப்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த இந்த ஒரு விளம்பரம்தான் சிறுவர் புத்தக உலகை மாற்றிய ஒன்றாகும். ஆம், கோகுலம் இதழின் விளம்பரம் இது. கல்கி இதில் வந்தது. ஓவியர் மாருதி அவர்களின் தூரிகை வண்ணத்தில் சிறார்களின் மனதை கவரும் விதத்தில் இல்லாமல் பெற்றோர்களின் மனதை கவரும் விதத்தில் அமைந்த இந்த விளம்பரம் ஒரு மைல் கல் ஆகும்.

 

gokulam 1st ad

இந்த இதழுடன் வந்த குட்டி பரிசு என்ன என்பதை அடியேனுக்கு யாராவது தெரியப் படுத்தினால் அகம் மகிழ்வேன். இதனைப் போலவே மற்றும் பல விளம்பரங்களை கல்கி இதழில் கொடுத்து அதன் மீது ஆர்வத்தை தூண்டினார்கள்.

gokulam 1974 ad

அடுத்த பதிவில் ஆரம்ப காலத்தில் வந்த கோகுலம் இதழ்களுடன் தற்போது வரும் கோகுலம் இதழ்களோடு ஒப்பிடுவதை செய்யாமல் கோகுலத்தினை நான்கு கால கட்டங்களில் பிரித்து ஆராய்வோம்.

 

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

9 comments:

  1. iam very much eager to see the initial days' covers of the gokulam magazine. they were wonderful.

    i was reading them till we moved away from chennai.

    thanks for the reminder.

    ReplyDelete
  2. happy diwali to you & Your family/friends circle.

    ReplyDelete
  3. நண்பரே ,
    சிறுவயதில் கோகுலத்தை விட பாலமித்ரா ,அம்புலிமாமா தான் அதிகம் படித்ததுண்டு . ஆனால் அவ்வபோது படித்துள்ளேன் ,கோகுலத்தில் சிறுவயதில் ஏதோ போட்டியில் ரூபாய் 10 பரிசு வாங்கியது உண்டு . நினைவு படுத்தியதற்கு நன்றி .

    அன்புடன் ,
    லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

    ReplyDelete
  4. அருமை.

    இதுதான் கோகுலம் இதழின் முதல் விளம்பரமா? சூப்பர்.

    ReplyDelete
  5. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
    தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

    ReplyDelete
  8. காமிக்ஸ் நண்பர்களே,

    வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

    புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

    இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
    காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

    ReplyDelete