Wednesday, December 8, 2010

பேட்மேன் தோன்றும் மர்மக்கொள்ளையன்

நண்பர்களே,

நெடுநாட்களுக்கு பின்னர் நேற்று தான் திடீரென்று பதிவிடும் எண்ணம் வந்தது. அதற்க்கு காரணம் நேற்று மறுபடியும் பேட்மெனின் தி டார்க் நைட் படத்தை தமிழில் பார்த்தேன்.  ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் பேட்மென் பற்றிய பதிவொன்றை இடவேண்டும் என்று நினைப்பேன், பின்னர் ஏதோ சில காரணங்களால் அந்த பதிவு தள்ளிப்போய்விடும். ஆனால் இந்த முறை அப்படி செய்யாமல் பதிவை இடவேண்டும் என்ற உந்துதல் அதிகரித்ததால் தான் இந்த பதிவு.

ஆகையால் தமிழில் வந்த பேட்மென் கதைகள் பற்றி தேடுகையில் (திகில் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் நீங்கலாக) எனக்கு தோன்றியது இந்த தேவியின் கண்மணி காமிக்ஸ் தான். ஆகையால் அந்த காமிக்ஸில் வந்த ஒரு கதையை உங்களுக்கு இங்கே வழங்குகிறேன். இந்த கதையின் பக்கங்களை கணினிப்படுதி தந்த அருமை நண்பருக்கு நன்றிகள்.

BRENACS 001

2

BRENACS 002

3

BRENACS 003

4

BRENACS 004

5

BRENACS 005

6

BRENACS 006

7

BRENACS 007

8

BRENACS 008

9

BRENACS 009

10

BRENACS 010

11

BRENACS 011

12

BRENACS 012

13

BRENACS 013

14

BRENACS 014

15

BRENACS 015

16

BRENACS 016

என்ன, நம்முடைய திகில் காமிக்ஸில் படித்த ஜோக்கரின் ஆரம்ப கால வாழ்க்கைக்கும் இந்த கதைக்கும் பல மாறுதல்கள் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது அமெரிக்காவில் வரும் காமிக்ஸ்களில் சகஜம். ஒரு எடிட்டர் மாறி வேறு ஒருவர் வரும்போது அவர்கள் இதுபோல சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்வது வாடிக்கை.

அடுத்து வேறொரு காமிக்ஸ் கதையுடன் வருகிறேன்.

Wednesday, April 14, 2010

ஸ்பைடர் - கிங் ஆப் குரூக்ஸ்

நண்பர்களே, 

சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள். பல நாட்களாக நான் வாங்க இருந்த புத்தகம் ஒன்றினை நண்பர் ஒருவர் எனக்கு சென்ற வாரம் பரிசளித்தார். அதன் விவரங்களை இந்த பதிவில் அளித்தது உங்களை எல்லாம் வாங்க தூண்டுகிறேன். ஆம், அத்துணை சிறப்பு வாய்ந்த புத்தகமே அது. கிங் ஆப் குரூக்ஸ் என்ற புத்தகம் அமெரிக்காவின் டைட்டன் புக்ஸ் மூலம் வந்துள்ளது. இதோ அந்த அற்புதமான புத்தகத்தின் விவரங்கள்:

King_of_Crooks_pg_ 002

இதுதான் அந்த புத்தகத்தின் ஜாக்கெட் கவர். அதன் அட்டையை மட்டும் பார்க்க விரும்பினால், இதோ, அதுவும் உங்களின் பார்வைக்கு:

King_of_Crooks_pg_ 001

புத்தகம் அற்புதமாக பிரின்ட் செய்யப்பட்டு உள்ளது. அதனால் வாங்க மறுக்காதீர்கள். அதன் முதல் பக்கம்:

King_of_Crooks_pg_ 003

இந்த புத்தகத்தில் மொத்தம் மூன்று கதைகள் உள்ளன: இதோ அதன் விவரங்கள்:

King_of_Crooks_pg_ 012

King_of_Crooks_pg_ 035

King_of_Crooks_pg_ 070

இந்த மூன்று கதைகளுமே தமிழில் வந்துள்ளன:

spider padai

LionComicsIssueNo72DatedNov1990Meend[2]

New_Mr Marmam

 

புத்தகத்தை மறக்காமல் வாங்கி படியுங்கள் நண்பர்களே. மிஸ் செய்யக் கூடாத புத்தகம் இது.

Tuesday, March 2, 2010

பழைய காமிக்ஸ் புத்தக விற்பனை - ஒரு விவாதம்

நண்பர்களே,

நெடுநாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு மன்னிக்க. சில பேர் மட்டும் என்னிடம் "மன்னிக்க மனமில்லை, மன்னிக்க" என்று கூட சொல்லலாம். என்ன செய்வது சாமி, நம்ம பொழப்பு அப்படி ஆகி விட்டது. அதனால் பழைய விஷயங்களை மறந்து விட்டு பதிவுக்கு செல்வோம். இனிமேல் முடிந்த அளவிற்கு என்னால் இயன்ற ஸ்பைடர் மற்றும் இரும்புக்கை மாயாவி கதைகளை உங்களுக்கு வழங்க முயற்சி செய்கிறேன். அதனைப் போலவே எனக்கு மிகவும் பிடித்தமான கோகுலம் மற்றும் பூந்தளிர் புத்தகங்களையும் சற்று அலசுவோம். என்ன சரிதானே?

இந்த பதிவு இனிமேல் வரப்போகும் அனைத்து ரெகுலர் பதிவுகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கட்டும்.அதற்க்கு முன்பு இந்த செய்தித்தாளில் வந்த செய்தியை படியுங்கள்.

 

dinakaran 25th feb

இதில் நான் கவனித்த விஷயம் ஒன்று: இதனை வாங்கியவர் காமிக்ஸ் பிரியர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் கூட எங்கே நம்ம காமிக்ஸ் பிரியரோ என்று நினைத்தேன். அவருக்கு மின்னஞ்சல் கூட அனுப்பினேன். ஆனால் அவர் இல்லை என்று நினைக்கிறேன்.

அந்த விஷயத்தை விடுங்கள். ரொம்பவும் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த புத்தக விற்பனை நடந்த மூன்று நாட்களிலேயே பேட்மேன் காமிக்ஸின் முதல் இதழ் ஐந்து கோடி ரூபாய்களுக்கு விற்கப்பட்டு மற்றுமொரு சாதனையை புரிந்தது. நமது ஊரில் மட்டும் அப்படி பழைய காமிக்ஸ் புத்தகங்களை விற்றால் ஏதோ ராணுவ ரகசியத்தை விற்கிற மாதிரி பேசுகிறார்கள். இவர்களுக்கு என்ன தெரியும் ஒரு பழைய புத்தகத்தை பேணிப்பாதுகாக்கிற வேலை என்பது ஏதோ சாதாரண விஷயம் இல்லை என்பது.

பழைய முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், அசோக் மேத்தா காமிக்ஸ் போன்றவற்றின் அட்டைப்படங்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவை. அவை எல்லாம் இப்போது கை பட்டாலே உடைந்து போய் விடும் அவற்றை காப்பது என்பது குதிரை கொம்பு போல. அவற்றின் மீது டேப் ஓட்ட வேண்டும், பிளாஸ்டிக் கவரில் போட்டு பாதுகாக்க வேண்டும், என்று பல விஷயங்கள் உள்ளன. அதுவில்லாமல் இவற்றை யாரும் மனமுவந்து விற்பது இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கடினமான சூழ்நிலை வரும்போதே விற்கிறார்கள். அதனால் விற்பவர்களை யாரும் குறை சொல்ல வேண்டாம். உங்களால் வாங்க முடியவில்லை என்றால் விட்டு விடலாம், உங்களை யாரும் வற்புறுத்துவது கிடையாதே?

இப்படி எல்லாம் என்னுடைய நண்பர்கள் சில பேர் என்னிடம் சொல்கிறார்கள். ஏதோ அவர்களின் மனக்குறையை அவர்கள் என்னிடம் சொல்லி தீர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது?

ஆனால், புத்தக விற்பனையை வெறுக்கும் சிலர் "இப்படி ஒரு ருபாய், ரெண்டு ரூபாய்க்கு கிடைத்த புத்தகத்தை எல்லாம் ஐநூறு, ஆயிரம் என்று விற்பது அநியாயம்" என்று கூறுவதோடில்லாமல் விற்கும் சில நண்பர்களை பற்றி அவதூறாகவும் பேசுகிறார்கள். சிலர் இந்த காமிக்ஸ் விற்பனையை ஒரு கலையாகவே செய்வதாகவும் தகவல். அதனால் இரண்டு பக்கங்களிலும் கூர்ந்து கவனித்தால், அவசியம் என்றால் வாங்குங்கள், இல்லை என்றால் விட்டு விடுங்கள் என்பதே சரியான தீர்வாக தெரிகிறது.

இதனை பற்றிய உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.