Wednesday, December 8, 2010

பேட்மேன் தோன்றும் மர்மக்கொள்ளையன்

நண்பர்களே,

நெடுநாட்களுக்கு பின்னர் நேற்று தான் திடீரென்று பதிவிடும் எண்ணம் வந்தது. அதற்க்கு காரணம் நேற்று மறுபடியும் பேட்மெனின் தி டார்க் நைட் படத்தை தமிழில் பார்த்தேன்.  ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் பேட்மென் பற்றிய பதிவொன்றை இடவேண்டும் என்று நினைப்பேன், பின்னர் ஏதோ சில காரணங்களால் அந்த பதிவு தள்ளிப்போய்விடும். ஆனால் இந்த முறை அப்படி செய்யாமல் பதிவை இடவேண்டும் என்ற உந்துதல் அதிகரித்ததால் தான் இந்த பதிவு.

ஆகையால் தமிழில் வந்த பேட்மென் கதைகள் பற்றி தேடுகையில் (திகில் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் நீங்கலாக) எனக்கு தோன்றியது இந்த தேவியின் கண்மணி காமிக்ஸ் தான். ஆகையால் அந்த காமிக்ஸில் வந்த ஒரு கதையை உங்களுக்கு இங்கே வழங்குகிறேன். இந்த கதையின் பக்கங்களை கணினிப்படுதி தந்த அருமை நண்பருக்கு நன்றிகள்.

BRENACS 001

2

BRENACS 002

3

BRENACS 003

4

BRENACS 004

5

BRENACS 005

6

BRENACS 006

7

BRENACS 007

8

BRENACS 008

9

BRENACS 009

10

BRENACS 010

11

BRENACS 011

12

BRENACS 012

13

BRENACS 013

14

BRENACS 014

15

BRENACS 015

16

BRENACS 016

என்ன, நம்முடைய திகில் காமிக்ஸில் படித்த ஜோக்கரின் ஆரம்ப கால வாழ்க்கைக்கும் இந்த கதைக்கும் பல மாறுதல்கள் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது அமெரிக்காவில் வரும் காமிக்ஸ்களில் சகஜம். ஒரு எடிட்டர் மாறி வேறு ஒருவர் வரும்போது அவர்கள் இதுபோல சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்வது வாடிக்கை.

அடுத்து வேறொரு காமிக்ஸ் கதையுடன் வருகிறேன்.

13 comments:

  1. மிக அருமையான கதை,மிக அபூர்வமான பதிவு ,பாராட்டுகிறேன் ."தன்னிகரில்லாத குற்ற சக்கரவர்த்தி" அவர்களுக்கு எனது நன்றிகள்.இந்த கதையின் பக்கங்களை கணினிப்படுதி தந்த அருமை நண்பர்க்கும் நன்றிகள். ஆனால் இதே கதையை முன்பே படித்ததாக நாபகம்.அதவும் 20 வருடங்களுக்கு முன்னாள், அதன் ஓவியரும் வேறொருவர் .ஒரு கதைக்கு எத்தனை ஓவியர்கள் படம் வரைவார்களோ ?!!
    அன்புடன்,
    கேப்டன் ஹெச்சை

    ReplyDelete
  2. கதியை முழுமையாக பதிவு செய்தமைக்கும் நன்றிகள்.
    அன்புடன்,
    கேப்டன் ஹெச்சை.

    ReplyDelete
  3. //இது அமெரிக்காவில் வரும் காமிக்ஸ்களில் சகஜம்//.

    எதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆன மாதிரி இல்லே?இதோ சரியான ஸ்பெல்லிங்.

    அமெரிக்கன் காமிக்ஸ்ல இதெல்லாம் சகஜமப்பா!!

    என்னதான் கதை தமிழில் இருந்தாலும், மொழிபெயர்ப்பு கதையுடன் ஒன்ற மறுக்கிறதே.

    ReplyDelete
  4. கதை மிகவும் எடிட் செய்யப்பட்டுள்ளது போலுள்ளதே? ஒரு கன்டினியுடி இல்லாமல் அலைபாய்கிறதே?

    ReplyDelete
  5. படங்களின் வண்ணக்கலவை கூட ஒரு மாதிரியாகவே இருக்கிறது. இந்த கண்மணி காமிக்ஸ் மொத்தம் எத்துனை வந்தது என்று தெரியுமா? இதில் மாடஸ்டி கதைகள் வந்தது (என்று நினைக்கிறேன்).

    ReplyDelete
  6. முழுமையாக கதையை படிக்கும்படி ஸ்கான் வெளியிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  7. // நண்பர்களே,

    நெடுநாட்களுக்கு பின்னர் நேற்று தான் திடீரென்று பதிவிடும் எண்ணம் வந்தது. அதற்க்கு காரணம் நேற்று மறுபடியும் பேட்மெனின் தி டார்க் நைட் படத்தை தமிழில் பார்த்தேன். //

    நீங்க ஏன் அடிக்கடி படம் பார்க்க கூடாது !?
    அப்பதானே அடிக்கடி பதிவு போடுவீங்க :))
    .

    ReplyDelete
  8. //நீங்க ஏன் அடிக்கடி படம் பார்க்க கூடாது !?
    அப்பதானே அடிக்கடி பதிவு போடுவீங்க :))//

    ரிபீட்டு.

    ReplyDelete
  9. கதையும், வண்ணமயமாக்களும் சுமார்தான். தமிழாக்கம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். இதை எல்லாம் படிக்கும்போதுதான் விஜயன் அவர்களின் அருமை நமக்கு புரிகிறது.

    ReplyDelete
  10. நண்பரே,
    கண்மணி காமிக்ஸில் வந்த வேதாளன் கதைகளை வெளியிடுங்களேன்?

    ReplyDelete
  11. புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


    இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

    ReplyDelete
  12. அன்புள்ள அருமை நண்பர் ."தன்னிகரில்லாத குற்ற சக்கரவர்த்தி" அவர்களே!!! மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார்!! தங்களின் பதில் என்ன? என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்


    http://hajatalks.blogspot.com/2010/12/rathna-comics-written-by-haja-ismail.html#comments

    பயங்கரவாதி டாக்டர் செவன் said...


    மக்களே,

    பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!

    http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    December 24, 2010 2:11 AM

    ReplyDelete
  13. காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    முஸ்தபா, எண்ணூர்.

    ReplyDelete